மீட்பு மாதிரி

மீட்பு

7 ல் 6 நாள்

பரிசுத்த ஆவியானவர் மீட்பைத் தொடருகிறார்

இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது,ஒவ்வொரு முறை தாம் யாரேனும் ஒருவரைத் தொட்டபோதும், சுகமாக்கியபோதும்,வல்லமையான ஒரு சத்தியத்தைப் போதித்தபோதும்,மக்கள் மறுரூபமடைய உதவியபோதும்,பரலோகத்தை நமக்குச் சற்று நெருக்கமாகக் கொண்டு வந்தார். தம் பிதாவின் வலதுபாரிசத்தில் தமக்குரிய இடத்தில் அமர அவர் பரமேறிச் சென்றதும்,தேவத்துவத்தின் மூன்றாம் நபரை இந்த பூமிக்கு அனுப்பி,அவர் தம்மைப் பின்பற்றும் அனைவரோடும் இருக்கும்படிச் செய்தார். பரிசுத்த ஆவியானவர் நூறு சதவிகிதம் தேவனாகவே இருக்கிறார்,அவருக்கு பல பெயர்கள் உண்டு. அவற்றில் சில,பாராகளியோ (கூடவே வருபவர்), சத்திய ஆவியானவர்,துணையாளர்,ஆலோசகர்,தேற்றரவாளன் மற்றும் ரூவா (காற்று) ஆகியவை. அவர் முக்கியமாக ஒவ்வொரு விசுவாசியையும் தேவனுடைய வல்லமையால் நிரப்பும்படியும்,தேவனை அதிகமாக அறிய உதவும்படியும் அனுப்பப்பட்டார். அவர் தேவனுடைய ஆவியாக இருப்பதால்,நாம் தேவனுடைய சிந்தையையும்,இருதயத்தையும் நன்றாக அறிந்து கொள்ள உதவி செய்கிறார். கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஆசீர்வாதமாக இருக்கும்படி அவர் நமக்குப் பல்வேறு வரங்களைக் கொடுக்கிறார். சபைக்கு வெளியில் இருப்பவர்களும் நம் மூலமாக கிறிஸ்துவை அனுபவிக்கும்படி நாம் கனிகொடுக்க உதவி செய்கிறார். நாம் வேதத்தை ஆழமாக விளங்கிக் கொள்ளவும்,கிறிஸ்துவுக்குள் நம் புதிய வாழ்க்கையை உற்சாகத்துடனும், நோக்கத்துடனும் வாழவும் உதவுபவர் அவரே. அவர் தேவனுக்குப் பிரியமான தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ நமக்கு அவசியமான அனைத்தையும் அருளிச் செய்து,தேவனோடு ஐக்கியம் கொள்ளச் செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு ஆவிக்குரிய தூய ஜீவராசி அல்ல. மாறாக,அவர் வல்லமையுள்ளவர்,பொருட்களை சுழற்றி அடிக்கும் காற்றைப் போன்ற அவர் அசைவாடும்போது,நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றுகிறார். அவர் எல்லா அசுத்தத்தையும் சுத்திகரித்து,தான் தொடும் அனைத்திற்கும் ஜீவன் கொடுக்கும் ஊற்றுத் தண்ணீரைப் போன்றவர். அவர் பொன்னில் உள்ள மாசுக்களை எரித்து, அதைச் சுத்திகரித்து,முன்பை விட அதிகமான மதிப்பும் அழகும் கொடுக்கும் அக்கினியைப் போன்றவர். சத்துருவின் பிடிகளிலிருந்து அனுதினமும் நம்மை மீட்டு,கல்வாரியில் இயேசு நமக்காக அடைந்த வெற்றியில் வாழ உதவி செய்பவர் அவரே.

சிந்தனைக்கு:

பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி உங்களால் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியாது.

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

மீட்பு

கிறிஸ்மஸ் - நம்மை மீட்க கிறிஸ்துவை அனுப்பியதன் மூலம் தேவன் நமக்குச் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற நேரம். இந்த தியானத்தை வாசிக்கும் நீங்கள், உங்கள் மீட்பின் அனுபவத்தை நினைவுகூர்ந்து, உங்களுக்கு முன்பாக இருக்கும் பாதையில் கடந்து செல்ல வேண்டிய அனைத்திலிருந்தும் அவர் உங்களை மீட்பார் என்னும் நம்பிக்கையுடன் புதிய வருடத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaranக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/