மீட்பு மாதிரி

மீட்பு

7 ல் 7 நாள்

மீட்கப்பட்டவர்கள் சேருமிடம் நித்தியம்

இந்த ஏழு நாள் பயணத்தை முடிக்கும் தருவாயில்,நாம் இறுதியில் போய்ச்சேருமிடம் நித்தியம் என்பதை அறிந்துகொள்வது அவசியம். இப்போது இந்த உலகத்தில் வாழும்போது,மனிதனாக இருப்பதால் வரும் பாடுகளையும் ஆசீர்வாதங்களையும் கடந்து செல்கிறீர்கள். ஆனால்,இப்போதே உங்கள் இருதயத்தில் நித்தியம் பதிய வைக்கப்பட்டுள்ளது,அதற்காக இயேசுவுக்கு நன்றி,அவரே அங்கு வாசம் பண்ணுகிறார். ஆகவே,நீங்கள் கடந்து செல்ல அல்லது சகித்துக்கொள்ள வேண்டியது எதுவாக இருந்தாலும்,பாடுகளும் துக்கமும் இல்லாத ஒரு நித்திய வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம் உண்டு. உங்கள் வாழ்க்கை எவ்வளவுதான் வெற்றிகரமாக அமைந்தாலும்,உங்களால் கற்பனையே செய்து பார்க்கமுடியாத மேலான பலன்களை நித்தியம் கொடுக்கும். இயேசுவோடு வாழப்போகும் நித்திய வாழ்க்கையை நீங்கள் சந்தோஷமாக எதிர்பார்க்கலாம். அந்த நித்தியம் இங்கேயே தொடங்கிவிடுகிறது என்பதால்,நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பது உங்கள் வாழ்க்கையின் தன்மையை நிர்ணயிக்கிறது. தேவன் அருளிய தரிசனத்துடன், பரிசுத்தமாகவும் வேறுபிரிந்தும் வாழ்வீர்கள் என்றால்,உங்கள் வாழ்க்கை தானாகவே அதிகமாக இயேசுவின் வாழ்க்கையைப் போல இருக்கும். அதன் மூலம்,நீங்கள் பிரவேசிக்கும் உலகின் பகுதிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வாழ்நாளையும் கடந்து நிலைத்திருக்கும் ஒரு அடையாளத்தை விட்டுச் செல்வீர்கள். நித்திய மனப்பான்மை அவ்வளவு வல்லமையானது.

உங்கள் கனவுகளும்,குறிக்கோள்களும் முக்கியம் – ஆகவே,அவற்றை விட்டுவிடாதிருங்கள்,அதேசமயம் செய்யும்படி தேவன் உங்கள் இருதயத்தில் வைக்கும் அனைத்தையும் செய்ய நாடுங்கள். உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் பரிசின் மீது மட்டும் உங்கள் கண்கள் பதிந்திருக்கட்டும் – அந்தப் பரிசு இயேசுவே. நீங்கள் வெற்றி,செல்வம் அல்லது செல்வாக்கை விரும்பலாம்,அவை நல்லதுதான். ஆனால் இயேசுவோடு உங்களுக்கு உறவு இல்லை எனில், அவையனைத்தும் வீணாகும். இன்றும்,எல்லா நாளும் அவரையே தெரிந்துகொள்ளுங்கள். அவருடைய வார்த்தையின் மூலம் அவரைத் தேடுங்கள். பரிசுத்த ஆவியானவரோடு இசைந்திருங்கள்,அதன் மூலம் உங்கள் இருதயமும் மனமும் புதிதாகும்.

சிந்தனைக்கு:

வாழ்க்கை உங்களைக் கீழ்நோக்கி கொண்டு செல்லும்போது,நித்தியத்திற்கென்று பயிற்றுவிக்கப்பட்டு ஆயத்தமாகும்படி,மேல் நோக்கிப் பாருங்கள்.

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

மீட்பு

கிறிஸ்மஸ் - நம்மை மீட்க கிறிஸ்துவை அனுப்பியதன் மூலம் தேவன் நமக்குச் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற நேரம். இந்த தியானத்தை வாசிக்கும் நீங்கள், உங்கள் மீட்பின் அனுபவத்தை நினைவுகூர்ந்து, உங்களுக்கு முன்பாக இருக்கும் பாதையில் கடந்து செல்ல வேண்டிய அனைத்திலிருந்தும் அவர் உங்களை மீட்பார் என்னும் நம்பிக்கையுடன் புதிய வருடத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaranக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/