விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!மாதிரி
இயேசு வல்லமையுள்ள ஆண்டவர்!
இன்று, வேத வார்த்தையில் நமக்குக் கொடுக்கப்பட்ட தேவ குமாரனுடைய நாமங்களை நாம் தொடர்ந்து தியானிக்கப்போகிறோம். "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; அவர் நாமம் ... வல்லமையுள்ள தேவன், ... என்னப்படும்." (ஏசாயா 9:6)
உன் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என்பதை ஆண்டவர் அறிவார். எதிரிகளால் முற்றுகையிடப்பட்ட கோட்டையைப் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவாய் நீ பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும், தப்புவிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் அறிவார்... நீ எல்லா நேரங்களிலும் பலமுள்ள நபராக இருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும், அதனால்தான் அவர் உனக்காக பலமுள்ளவராக, வல்லமையுள்ள தேவனாக இருக்கிறார்.
வாழ்க்கையின் எந்தெந்தப் பகுதிகளில் நீ பலவீனமாக உணர்கிறாய்?
உன் சரீர பெலத்தைப் புதுப்பிக்க ஆண்டவர் உனக்குத் தேவைப்படுகிறாரா? அவர் உன் பெலத்தைப் புதுப்பிப்பதாக வாக்களிக்கிறார்… “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.” (ஏசாயா 40:29)
நீ மனதளவில் உற்சாகப்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும் என்று உணர்கிறாயா? ஆண்டவரால் உன்னைப் பலப்படுத்த முடியும்… "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." (மத்தேயு 11:28)
உன்னுடைய எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது உன் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றியோ நினைத்து பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாயா? வல்லமையுள்ள தேவன் உனக்கு அறிவிக்கிறார், "உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; ... என்று மெய்யாகவே சொல்லுகிறேன்." (எரேமியா 15:11)
உன் ஆண்டவர் வல்லமையுள்ள தேவன்!
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=christmasgift