விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!மாதிரி
இன்று உணர்வுள்ள நபராய் இரு...
இன்று, குறிப்பாக உன்னைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளுக்கு நீ உணர்வுள்ள நபராக இருக்கும்படி உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
நீ திருச்சபைக்கோ, வேலைக்கோ அல்லது வேறு எங்காவதோ செல்லும்போது அல்லது உன் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும்போது கூட, உன்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள், தங்களால் தனியாகச் சுமக்க முடியாத அளவுக்கு அதிகமான சுமைகளைச் சுமக்கிறார்களா என்பதை அறிந்து அவர்களுக்கு உதவ பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடு.
அவர்கள் நெருக்கப்படுவதை நீ உணர்ந்தால், "உன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? இன்று நான் உனக்கு என்ன காரியத்துக்காக ஜெபிக்கலாம்?" என்று அவர்களிடம் கேள்.
அவர்கள் வாழ்வில் விடுதலையையும் சுதந்திரத்தையும் கொண்டுவர ஆண்டவர் உன்னைப் பயன்படுத்துவார்! செவிகொடுப்பது என்பது ஆண்டவருடைய இதயத்திலிருந்து வரும் விலையேறப்பெற்ற ஒரு குணம்.
ஒருவரது பிரச்சனையை மேற்கொள்ள உதவும்படி, அவனுக்கு/அவளுக்கு செவிகொடுப்பதற்கான உன் ஆர்வம் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். சில சூழ்நிலைகளைப் பகிர்ந்துகொள்வது மிகவும் கடினம், ஆனால் தான் சொல்வதை ஒருவர் கேட்கிறார் என்பதை அறிந்துகொள்வதே பல துக்கங்களைக் குறைக்கும்.
இன்று கவனமாக இரு, ஏனென்றால் நீ ஒருவரின் வாழ்வில் அதிசயமாக இருக்கலாம்!
என்னுடன் சேர்ந்து ஜெபி... “ஆண்டவரே, இன்று உம்மைப்போலவே, நான் மற்றவர்களுக்கும் அவர்களின் தேவைகளுக்கும் செவிகொடுக்கும்படி, உணர்வுள்ள நபராக இருக்க எனக்கு உதவுவீராக. என் பாதையில் நீர் அனுப்புகிற காயப்பட்ட மக்களைப் பார்க்க எனக்கு உதவுமாறு நான் ஜெபிக்கிறேன். நான் நன்றாகச் செவிகொடுக்கவும், மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் நபராக இருக்கவும் தேர்வு செய்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=christmasgift