விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!மாதிரி
நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பு!
உலக இரட்சகரின் பிறப்பை தேவதூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்த சம்பவமான வேதாகம சம்பவம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
"தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்." (லூக்கா 2:10-14)
மேய்ப்பர்கள் டிசம்பர் மாதத்தில் (இஸ்ரவேல் தேசத்தில் குளிர் மற்றும் மழை பெய்யும் மாதம்…) வயல்வெளிகளில் தங்கள் இரவுகளைக் கழிப்பதில்லை என்பதால், தொழில்நுட்ப ரீதியாக இயேசு டிசம்பர் 25 அன்று பிறக்கவில்லை என்பது நமக்குத் தெரியும். இருப்பினும், இரட்சகராகிய கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்க கிறிஸ்துமஸ் ஒரு அற்புதமான வாய்ப்பாகும்.
இந்த வசனத்தின் சுருக்கம் இங்கே:
பயப்படாதே! ஏனென்றால், எல்லா மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் நற்செய்தியை நான் உனக்கு அறிவிக்கிறேன்! ஒரு இரட்சகர் இன்று பிறந்திருக்கிறார், அவர் கர்த்தராகிய கிறிஸ்து. உன்னதத்தில் ஆண்டவருக்கு மகிமையும் பூமியில் சமாதானமும் உண்டாவதாக. உன் மீதும், மற்ற எல்லா மனிதர்கள்மீதும் ஆண்டவரது பிரியம் உண்டாவதாக!
இது அற்புதம் அல்லவா?
கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள எத்தனை ஒரு அருமையான வாய்ப்பு இது... நாம் அதைப் பயன்படுத்திக்கொள்வோம்!
இது உனக்கு ஒரு அழகான கிறிஸ்துமஸ் தின மாலைப்பொழுதாக அமைவதாக!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=christmasgift