விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!மாதிரி
"செய்ய வேண்டும் என்று நீ எழுதிவைத்திருக்கிற உன் பட்டியலை" இயேசுவிடம் விட்டுவிடு!
நம்மில் பலருக்கும் "செய்ய வேண்டும் என்று எழுதிவைத்திருக்கும் பட்டியல்கள்" இருக்கும். ஒரு நாளின் இறுதியில், அடுத்த நாள் நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் நமது கைபேசி செயிலியில் அல்லது ஸ்டிக்கி நோட்டில் அல்லது ஒரு பழைய ரசீதின் பின்புறத்தில் எழுதிவைக்கிறோம்.
உதாரணமாக... மளிகைப் பொருட்களை வாங்குதல், ஒரு நல்ல பரிசுப் பொருளை வாங்குதல், பல் மருத்துவரிடம் செல்லுதல் என்பன போன்ற பல காரியங்களை பதிவு செய்து வைத்தலின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் என்பது உனக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும்! சில நேரங்களில் நம் நாட்கள் செய்ய வேண்டிய காரியங்களின் பட்டியல்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால் அந்த நாளைப் பற்றி வேதாகமம் சொல்வது இதுதான்.
“இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.” (சங்கீதம் 118:24)
இந்த நாள் நமக்கு ஒரு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது! நீ எதைச் செய்ய முடிவு செய்கிறாயோ அதன்படிதான் அந்த நாள் உனக்கு அமையும். இன்று நீ நடந்துகொள்ளும் விதம் உனக்கு ஆண்டவருடைய சமாதானத்தை கொண்டுவரலாம் அல்லது அதே நடத்தை ஆண்டவரிடமிருந்து உன்னை விலக்கியும் வைக்கக் கூடும்.
இன்று நீ சந்திக்கும் கடைசி நிமிட மாற்றங்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள். உன் கண்களை கர்த்தர் மீதும், அவருடைய திட்டத்தின் மீதும் வைத்திரு. நீ நினைப்பதுபோல் நடக்காவிட்டாலும், நிச்சயமாக, அது உனக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும்!
என்னுடன் சேர்ந்து ஜெபிப்பாயா... “ஆண்டவரே, இது நீர் உண்டுபண்ணின நாள்; நான் இதில் மகிழ்ந்து களிகூருவேன். இன்றும் நாளையும் நடக்கவிருக்கும் எல்லாவற்றிலும் நான் களிகூர்ந்து மகிழ விரும்புகிறேன். நீர் எனக்கு சிறந்ததை விரும்புகிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன் மற்றும் அறிக்கையிடுகிறேன், மேலும் உமது 'தெய்வீகமான எதிர்பாராத' மாற்றங்களை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=christmasgift