விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!மாதிரி
இயேசு சமாதான பிரபு!
வேதாகமத்தில், இயேசு "சமாதான பிரபு" என்றும் அழைக்கப்படுகிறார் (ஏசாயா 9:6)
சொல் அகராதியின்படி “பிரபு” என்ற வார்த்தை, “அந்தத் தலைப்பிலேயே ராஜரீகத்தை உடைய ஒருவரின் தன்மையைக் குறிக்கும் பெயராக இருக்கிறது; அது ஒரு ராஜ்யம் அல்லது மாநிலத்தின் ஆட்சியாளரைக் குறிக்கிறது." இயேசு ராஜரீகமுள்ளவர், அவருக்கு பிரபு என்ற பட்டத்தை வழங்குவதன் மூலம், பிதாவாகிய தேவன் அந்தப் பட்டத்துடன் சேர்ந்து வரும் அனைத்து மகத்துவத்தையும் அவருக்கு வழங்குகிறார்.
ஆனால் "பிரபு" என்ற வார்த்தை ராஜாவின் குமாரனையும் குறிக்கிறது. இதன் மூலம், ஆண்டவர் பூமியில் ஆட்சி செய்யும் ராஜரீகமுள்ள ராஜா என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். இயேசுவே சமாதான பிரபு, உனக்கு மெய்யான சமாதானத்தைத் தருபவரான ஆண்டவர் இயேசு ஒருவரே.
அவர் மூலம் மாத்திரமே உன்னால் மெய்யான சமாதானத்தை அடைய முடியும்.
முதலாவது, ஆண்டவருடன் சமாதானம்பண்ணு. இயேசு சமாதான பிரபு, ஏனென்றால் அவருடைய பலி உன்னை ஆண்டவருடன் ஒப்புரவாகச் செய்கிறது.
அதேவேளையில், உன் இதயத்தில் நீ பெற விரும்பும் சமாதானத்தை, வேறு எங்கிருந்தும் உன்னால் பெற்றுக்கொள்ள முடியாது.
இயேசு சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." (யோவான் 14:27)
சமாதான பிரபு உன்னை சந்தித்து உன் இருதயத்தில் ஆளுகை செய்வாராக!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=christmasgift