விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!மாதிரி
விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பின்பற்று
வேதாகமம் இயேசுவை "பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம்" என்று குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 22:16)
படகுகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, மாலுமிகள் அவற்றின் சுக்கானைத் திருப்பி நட்சத்திரங்களை நோக்கியே தங்கள் பாதைகளைப் பின்பற்றிச் சென்றனர். நட்சத்திரம் இருளின் நடுவில் வெளிச்சமாகவும், வழிகாட்டியாகவும், பயணிக்க வேண்டிய பாதையைக் காட்டுவதாகவும் இருக்கிறது. அதனால் பயணிகள் தங்கள் வழியை இழந்துவிட மாட்டார்கள். நன்கு பரீட்சயமான நட்சத்திரங்களில் ஒன்றான, மாலைநேர நட்சத்திரமானது (மேய்ப்பனின் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது), அதன் பெயருக்கு ஏற்ற விதத்தில் நன்றாகப் பொருந்துகிறது... மாலை நேரத்தில் அது முதலில் தோன்றி, கடைசியாக சூரிய உதயத்தின் வெளிச்சத்தில் மங்கும், அது மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வழிநடத்திச் செல்ல உதவும்.
நாம் இருளில் இருக்கும்போது, நாம் எங்கே இருக்கிறோம் என்பதும், எங்கு செல்வது என்பதும் நமக்குத் தெரியாது. நீ ஒரு சூழ்நிலைக்கு மத்தியில் குழப்பமடைந்து, வாழ்க்கையில் பல பிரச்சனைகளால் திசைதிருப்பப்பட்டிருப்பாயானால், உன் பார்வையை இயேசுவின் மீது செலுத்து. உன் இருளில் பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரத்தைப்போல, கிறிஸ்து உன்னை பிரகாசிப்பிப்பார், அவருடைய சமூகத்தில் வேற்றுமையின் நிழல் இல்லை!
"அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது" என்று யோவான் சொன்னதுபோல், (யோவான் 1:5) இயேசு பிரகாசிக்கும் ஒளியாய் இருக்கிறார். இந்தப் பிரகாசிக்கும் ஒளி மிகவும் விலையேறப்பெற்றது. இது வரவிருக்கும் நாட்களுக்கான நம்பிக்கையின் அவதாரமாகும்.
இந்த கிறிஸ்துமஸ் வாரத்தில், உலகம் முழுவதற்கும் ஒளியாக இருக்கிற இயேசுவைப் பாடி ஆராதிப்போமாக!
இந்த நாள் அவருடைய ஒளியால் நிறைந்த நாளாக அமையட்டும்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=christmasgift