விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!மாதிரி

விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!

10 ல் 10 நாள்

மிகவும் விலையேறப்பெற்ற பரிசு: இயேசு! 🎁

கிறிஸ்துமஸ் தினம் வந்துவிட்டது. இது ஆச்சரியத்தின் உச்சகட்ட பருவம்! இன்றுவரை, ஒரு பண்டிகைக்கான சூழலைப் பார்த்தோம். விரைவில் நாம் நேசிக்கும் நபர்களுடன் இணைந்து, நல்ல ருசிகரமான உணவை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்வோம் (நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஒரு நபர் இருந்தால்) உனக்கு அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லையென்றால், நீ இந்த நேரத்தைத் தனியாகக் கழித்துக்கொண்டிருக்கிறாய் என்றால், நான் உன்னுடன் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உண்மையாகவே, இந்த நேரம் மிக வேகமாகக் கடந்து செல்கிறது. இதைப் பற்றி நாம் நினைக்கும் போது, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதகுலம் பரலோகத்திலிருந்து ஒரு பரிசைப் பெற்றுக்கொண்டது: அந்தப் பரிசுதான் இயேசு. எல்லா மனிதர்களும் வருடம் முழுவதும் ஆச்சரியத்தால் நிரப்பப்பட வேண்டும் என்பதற்காகவே கொடுக்கப்பட்டது!

இன்று, இயேசுவின் மூலம் உனக்குள் உள்ள ஆச்சரியத்தை மீண்டும் எழுப்ப விரும்புகிறேன்.

உலகத்தின் இரட்சகர், மேகம் போன்ற தேவதூதர்கள் மற்றும் வான மண்டலத்து யுத்த வீரர்களின் இராணுவத்தால் சூழப்பட்டவராய், வெற்றி முழக்கத்தோடும் புகழ்பெற்ற ஊர்வலத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவரவில்லை.

இல்லை, அவர் அப்படி இறங்கிவரவில்லை... அவர் பெத்லகேம் நகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அமைதியாக, முற்றிலும் தாழ்மையுடன் வந்தார். அன்றிரவு, அவர் பிறப்பதற்குகூட இடமில்லை. லூக்கா எழுதின சுவிசேஷம் நமக்குச் சொல்வதுபோல், சத்திரத்தில் இடமில்லாததால், இயேசு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார்.

"இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்." (லூக்கா 2:11-12)

இயேசு, தாம் பூமியில் பிறந்த முதல் நாள் துவங்கி, நமக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தார்: எல்லாவற்றிற்காகவும் தன் பெற்றோரைச் சார்ந்து வாழும் ஒரு குழந்தையாகப் பிறந்ததன் மூலமும், மேய்ப்பர்களுக்குத் தரிசனமானதன் மூலமும்‌ அவர் தாழ்மையைக் கற்பிக்கிறார். உலக இரட்சகர் பிறந்துவிட்டார்!

குழந்தையாகிய இயேசு எப்படி சாப்பிட வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி பல் துலக்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். ஆண்டவர் சிறு குழந்தையாக அவதாரித்து வந்து, வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதை "கற்பனை செய்து பார்ப்பது" சில சமயங்களில், எனக்குக் கடினமாகத்தான் இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நீயும் ஒப்புக்கொள்கிறாயா?

இன்று உன்னையும் என்னையும் மற்றும் நம் அனைவரையும் இரட்சிக்கும்படி இயேசு வந்தபோது, அவர் வெளிப்படுத்திய ஆச்சரியமான மனத்தாழ்மையை நினைவுகூர உன்னை அழைக்கிறேன்.

என்னுடன் சேர்ந்து ஆண்டவரைத் துதிக்க விரும்புகிறாயா? “ஆண்டவரே, என்னைப்போல ஒரு சாயலைத் தரித்துக்கொள்ள உமது மகத்துவமான பரலோக சிங்காசனத்திலிருந்து இறங்கிவரத் தயாராக இருந்ததற்காக நான் உம்மைத் துதிக்கிறேன். நீர் இவ்வாறு உம்மைத் தாழ்த்திக் கொண்டபோது, நீர் எனக்கு அருகில் வந்து பிதாவின் அன்பையும் கிருபையையும் எனக்கு வெளிப்படுத்தினீர். உமக்கு அளிக்க வேண்டிய சகல கனத்தையும் மகிமையையும் நான் உமக்கு அளிக்க விரும்புகிறேன்! ஆமென்.”

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

வேதவசனங்கள்

நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!

கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=christmasgift