விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!மாதிரி
ஆண்டவர் உன் நித்திய பிதா!
இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட அடுத்த நாமம், அதாவது இன்று நாம் தியானிக்க இருக்கும் இயேசுவின் நாமமானது எனக்கு மிகவும் பிடித்த நாமங்களில் ஒன்று: "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ... அவர் நாமம் ... நித்திய பிதா, ... என்னப்படும்." (ஏசாயா 9:6)
ஒரே நபரைப் பற்றி விவரிக்கும் வார்த்தைகளான "குமாரன்" மற்றும் "பிதா" என்ற வார்த்தைகள் அடுத்தடுத்து வந்து அதே நபரைக் குறிப்பிடுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இந்தத் தீர்க்கதரிசனத்தில் பேசுவது ஆண்டவருடைய இதயம் என்று நான் நம்புகிறேன், அதாவது பிதாவின் இதயம் பேசுகிறது. அவர் நமது பிதாவாக இருக்க விரும்புகிறார் என்பதை நாம் எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். "நித்திய" என்று ஆண்டவர் குறிப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வேதாகமத்தின் மற்றொரு பதிப்பு "என்றென்றைக்குமான தந்தை" என்று கூறுகிறது.
ஆண்டவர் உண்மையுள்ளவர் என்பதையும், அவர் எப்பொழுதும் உன்னுடன் கூட இருக்கிறார் என்பதையும், அதை எதனாலும் மாற்ற முடியாது என்பதையும் நீ மறந்துவிடக்கூடாது என்று ஆண்டவர் விரும்புகிறார். அவர் உன் பிதாவாக இருந்தார், இப்போதும் இருக்கிறார், அவர் எப்போதும் உன் பிதாவாக இருப்பார்.
உன் பரிபூரண தந்தையாக, உனக்கு எது நல்லது என்பதை அவர் நன்கு அறிவார். உனக்குத் தேவையானவற்றை அவர் முழுமனதோடும் மகிழ்ச்சியுடனும் கொடுப்பார்.
வேதாகமம் கூறுகிறது, "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:11)
ஆண்டவர் உனக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்கிறார்! அவரிடம் நீ நன்மையானவைகளைக் கேட்டு பெற்றுக்கொள்வாயாக!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=christmasgift