விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!மாதிரி
ஆண்டவர் உன்னுடன் கூட இருக்கிறார் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்!
ஒரு குழந்தை இந்த உலகில் பிறக்கும்போது, அக்குழந்தை பெறும் முதல் விஷயங்களில் ஒன்று, அவனது/அவளது பெயர்தான். இந்தப் பெயர் பெரும்பாலும் ஒரு அர்த்தமுள்ளதாகவும் மற்றும் குழந்தையின் அடையாளத்தைக் குறிப்பதாகவும் இருக்கும். உதாரணமாக, எபிரேய மொழியில் காபிரியேல் என்ற பெயருக்கு "ஆண்டவர் என் பலம்" என்று அர்த்தம் என்பது உனக்குத் தெரியுமா?
ஆண்டவர் மெய்யாகவே நம்மோடு கூட இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால்தான், "தேவன் நம்மோடிருக்கிறார்" என்ற அர்த்தமுள்ள, இம்மானுவேல் என்ற நாமத்தை இயேசுவுக்குக் கொடுத்து அவரது அடையாளத்தை உருவாக்கினார்.
வேதாகமம் கூறுகிறது, "அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்." (மத்தேயு 1:23)
ஒவ்வொரு முறையும் இயேசுவைப் பற்றி, அதாவது இம்மானுவேலைப் பற்றி நினைக்கும்போது, தேவன் உன்னுடன் இருக்கிறார் என்பதை நீ நினைவில்கொள்ள வேண்டும் என்று பிதாவாகிய தேவன் விரும்புகிறார் என்பதை அறியும்போது, இது உனக்குள் எப்படிப்பட்ட உணர்வைத் தருகிறது?
ஆம், இம்மானுவேலராகிய தேவன் உன்னுடன் இருக்கிறார். இப்போதும் இருக்கிறார் எப்போதும் உன்னுடன் இருப்பார்! இயேசுவே, எங்களுடன் இருப்பதற்கு நன்றி.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=christmasgift