விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!மாதிரி

உன் ஆலோசனைக் கர்த்தருக்கு செவிகொடு...
இன்று, ஏசாயா புத்தகத்திலிருந்து தேவ குமாரனுடைய நாமங்களில் பல நாமங்களைப் பற்றி நாம் தியானிக்கப்போகிறோம்.
இயேசு பிறப்பதற்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவின் வருகையைப் பற்றி பழைய ஏற்பாட்டில் அறிவித்திருக்கிறார். மேலும் ஆண்டவர், தம்முடைய தூதரின் வாயிலாக, தம் குமாரனுக்கு வெவ்வேறு நாமங்களை அளிக்கிறார். இந்த நாமங்கள் ஒவ்வொன்றும் பிதாவுடைய இதயத்தின் அம்சத்தையும், அவர் தமது குமாரன் மூலம் மனிதர்களுக்கு என்ன கொடுக்க விரும்பினார் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, ... என்னப்படும்.” (ஏசாயா 9:6)
இயேசு உன் ஆலோசனைக் கர்த்தர், அவர் ஒரு "அதிசயமான ஆலோசனைக் கர்த்தர்!”
இந்த நாமத்தின் நிமித்தம், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளிலும் ஆண்டவர் நம்முடன் இருக்க விரும்புகிறார் என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். அவர் நமக்காக ஆயத்தம் செய்துள்ள பாதையில் நம்மை வழிநடத்தத் தயாராகவும் ஆவலாகவும் இருக்கிறார் என்பதை அவர் நமக்குத் தெரியப்படுத்துகிறார்.
இனி என்ன செய்வது என்று உனக்குத் தெரியாதபோது, நீ குழப்பமடைந்து இருப்பதாக உணரும்போது, அமைதியாக இரு, உன் பயத்தை உதறித்தள்ளு... மேலும் உன் அதிசயமான ஆலோசனைக் கர்த்தர் உன்னோடு பேசி உன்னை வழிநடத்துவதை நீ கவனி!
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=christmasgift